முன்னாள் முதல்வர் சைக்கோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சைக்கோ என்று நந்தமூரி பாலகிருஷ்ணா குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில், ``முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது அம்மாநிலத் திரைத்துறையினரைச் சந்திக்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்ததாகவும், பின்னர் நடிகர் சிரஞ்சீவியின் வலியுறுத்தலால் அவர் பேச சம்மதித்ததாகவும்’’ பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ் கூறினார்.
ஆனால், ஸ்ரீனிவாஸின் கருத்தை மறுத்த தெலுங்கு தேசக் கட்சியின் எம்.எல்.ஏ.வும் நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, ``சைக்கோவை திரைத்துறை பிரதிநிதிகள் சென்றனர். ஆனால், சிரஞ்சீவியின் வலியுறுத்தலால்தான் ஜெகன் மோகன் ரெட்டி கீழிறங்கி வந்ததாகவும் கூறுவது பொய்’’ என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சைகோ என்று கூறியது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திலிருந்து தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் தனது பெயரை 9-ஆவது இடத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் பாலகிருஷ்ணா அதிருப்தி தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய் பிரசாரம் தொடரும்... அட்டவணையில் திடீர் மாற்றம்!
Chandrababu Naidu's MLA Nandamuri Balakrishna Calls Former Andhra CM Jagan Mohan Reddy 'Psycho', Stirs Row
What's Your Reaction?






