உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர் எம்.எஸ். சுவாமிநாதன்.
இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ். சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.
மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்திய எம்எஸ் சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும் நமக்கு அவர் உணவுப் பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும் எளிமையுன் உருவமாகவும் இருந்தார். சத்தான, மக்கள் தொகைக்கான தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிரை கண்டறியவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று புகழாரம் சூட்டினார்.
இங்குள்ள அறிவியலாளர்களும் அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்கும் பணிகளை நீங்கள் எல்லோரும் தொடர்ந்து செய்ய வேண்டும். மண்ணுயிர் காக்கும் எங்களது முயற்சிக்கு அறிவியலாளர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
What's Your Reaction?






