'ஏ' அணிகள் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா

Sep 27, 2025 - 09:03
 0
'ஏ' அணிகள் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்டில், இந்தியா 'ஏ' அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிய, இந்த வெற்றியுடன் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

லக்னெளவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 420 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் மானவ் சுதர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து தனது இன்னிங்ûஸ விளையாடிய இந்தியா, 194 ரன்களுக்கே சுருண்டது. சாய் சுதர்சன் 75 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலிய பெளலர்களில் ஹென்றி தார்ன்டன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

226 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ விளையாடிய ஆஸ்திரேலியா, 185 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 85 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் மானவ் சுதர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியாக, 412 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து வென்றது. கே.எல்.ராகுல் 176, சாய் சுதர்சன் 100 ரன்களுடன் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆஸ்திரேலிய வீரர்களில் டாட் மர்ஃபி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0