2021-யைவிட 2026-ல் மோசமான தோல்வியை அதிமுக சந்திக்கும்: டிடிவி தினகரன்

Sep 27, 2025 - 14:32
 0
2021-யைவிட 2026-ல் மோசமான தோல்வியை அதிமுக சந்திக்கும்: டிடிவி தினகரன்

2021 தேர்தலைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

அதிமுக ஆட்சியில் அமர்வதைவிட கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிசாமியின் ஒரே இலக்கு. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. கட்சி தன் கையில் இருந்தால் போதும் என நினைக்கிறார். 2021 தேர்தலைவிட 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும்.

அரசியலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதுகிறேன்.

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சீமானின் பேச்சு சரியாக இல்லை. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமானின் அருவறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்கடுமையாக இருக்கும்" என்று பேசியுள்ளார்.

AMMK party leader TTV Dhinakaran says that AIADMK will face a crushing defeat in 2026

இதையும் படிக்க | போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0