நெட்ஃபிளிக்ஸ் உடன் கைகோர்க்கும் மத்திய அரசு! ஏன்?

இந்திய சுற்றுலாவை மேம்படுத்த நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் இணைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஏராளமான திரைப்படங்கள், இந்தியாவின் 23 மாநிலங்களின் 100-க்கும் அதிகமான நகரங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்திய நகரங்களின் கலாசாரம், கட்டமைப்புகள், வாழ்வியல் ஆகியவை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் எளிதாகக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை திரைப்படங்களில் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் இணைந்துள்ளது.
இதற்காக, திரைப்படங்களின் கதைக்குள் இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாத் துறை மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவன அதிகாரிகள் இணைந்து செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, கொரியா, ஸ்பெயின், பிரேசில் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலா வாரியங்கள் தங்களது சுற்றுலாத் துறையை மேம்படுத்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நானியின் தி பாரடைஸ் படத்தில் மோகன் பாபு..! அறிமுக போஸ்டர்!
The Ministry of Tourism is reportedly teaming up with Netflix OTT platform to promote Indian tourism.
What's Your Reaction?






