லோகா சாப்டர் 2 அப்டேட்: இரண்டாம் பாகத்தில் டொவினோ தாமஸ்!

Sep 27, 2025 - 15:03
 0
லோகா சாப்டர் 2 அப்டேட்: இரண்டாம் பாகத்தில் டொவினோ தாமஸ்!

லோகா சாப்டர் 1 படத்தின் இரண்டாம் பாகத்தில் டொவினோ தாமஸும் இணைந்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன் - நஸ்லேன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வசூலும் வரவேற்பும் பெற்ற லோகா சாப்டர் 1 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் துல்கர் சல்மான், தனது எக்ஸ் பக்கத்தில், லோகா சாப்டர் 1 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸும் இணைவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த முன்னோட்ட விடியோவையும் பகிர்ந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அருண் டொமினிக்தான், இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் மேலும், லோகா கதைக்களத்துடன் தொடர்புடைய 4 பாகங்கள் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ரஷ்மிகா - ஆயுஷ்மானின் தம்மா டிரைலர்!

Producer Dulquer Salmaan announces Lokah Chapter-2 with Tovino Thomas in new extended clip

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0