நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை! தொடக்கிவைத்தார் பிரதமர்!

Sep 27, 2025 - 14:32
 0
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை! தொடக்கிவைத்தார் பிரதமர்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார்.

இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் இன்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.

ஜெய்ப்பூர் வர்த்தக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒடிசா ஜார்சுகுடா நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி,

"உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலமாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறுகிறது.

சுதேசி 4ஜி இணைய சேவை இன்று இங்கிருந்து தொடக்கிவைக்கிறேன். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1 லட்சம் 4ஜி மொபைல் கோபுரங்கள் இன்று பயன்பாட்டுக்கு வருகின்றன.

அதிவேக இணையம் பெறாத பகுதிகள், கிராமங்கள் இதன் மூலமாக பயன்பெறும். எல்லையில் உள்ள நமது வீரர்களும் பாதுகாப்பான அதிவேகமான உள்நாட்டு சேவைகளை இனி பயன்படுத்த முடியும்" என்று கூறினார்.

PM Modi inaugurated the indigenous BSNL 4G network via video conferencing in jaipur

இதையும் படிக்க | போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0