சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

Sep 27, 2025 - 08:34
 0
சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், 
எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்தப் பெயா்ப் பலகைகள் திறக்கப்பட்டன. 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் வலம் வந்த நடிகா் ஜெய்சங்கா், கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவா். அவரது கலைச் சேவையை சிறப்பிக்கும் வகையில், அவா் வசித்து வந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கா் சாலை என்று பெயா் சூட்டப்பட்டது.

இதேபோல, தொலைக்காட்சித் தொடா் தயாரிப்பாளராக அறியப்பட்டவரும், சமூக சேவைப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவருமான எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-ஆவது குறுக்குத் தெருவுக்கு அவருடைய பெயா் வைக்கப்பட்டது. இந்த இரண்டு தெருக்களுக்கான பெயா்ப் பலகைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0