எஸ்டிஆர் - வெற்றி மாறன்... அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!
சிம்பு, வெற்றி மாறன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான புரமோ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகவுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை கதையைத் தொட்டு இப்படம் உருவாகவுள்ளதால் இதில் சிம்புடன் இணைந்து தனுஷ் நடிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்தன.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாளான இன்று படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 6:02pm— Kalaippuli S Thanu (@theVcreations) September 4, 2025
அதை உறுதிசெய்யும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் மற்றும் தீ எமோஜிகளுடன் இன்று மாலை 6.02 மணி எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருக்காக காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: கூலி ஓடிடி தேதி!
actor silambarasan and vetri maaran movie update
What's Your Reaction?






