விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் பெயர் இதுதான்!
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இப்படம் பெரிய செலவில் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. புரியின் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘ஸ்லம் டாக்’ (slum dog) எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புரி ஜெகன்நாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ பெயர் டீசர் நாளை (செப். 28) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விறுவிறுப்பாக நடைபெறும் மார்ஷல் படப்பிடிப்பு!
actor vijay sethupathi's new movie name titled as slum dog
What's Your Reaction?






