ஓடிடியில் வெளியானது காட்டி!

Sep 26, 2025 - 15:02
 0
ஓடிடியில் வெளியானது காட்டி!

நடிகை அனுஷ்காவின் காட்டி படம் அமேசான் பிரைமில் ஓடிடியில் இன்று (செப்.26) வெளியானது.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை அனுஷ்கா பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் எந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடித்த ‘காட்டி’ (ghaati) திரைப்படம் செப். 5ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

Actress Anushka's film Gatti was released on OTT on Amazon Prime today (September 26).

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0