விறுவிறுப்பாக நடைபெறும் மார்ஷல் படப்பிடிப்பு!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மெய்யழகன் திரைப்படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவான வா வாத்தியார் விரைவில் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே, இந்தாண்டு இறுதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி - 2 திரைப்படத்தில் கார்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனத் தகவல் வெளியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இதற்கான, கார்த்தியின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு விடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. 1960 காலகட்டங்களில் நடந்த கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ் உடன் கைகோர்க்கும் மத்திய அரசு! ஏன்?
actor karthi's marshal movie shoot begins
What's Your Reaction?






