காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்!

காஞ்சிபுரம் கணேஷ் நகரில் அமைந்துள்ள தும்பவனம் மாரியம்மனுக்கு நவராத்திரி விழாவையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டு பகுதி கணேஷ் நகரில் அமைந்துள்ளது தும்பவனம் மாரியம்மன் கோயில். நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி விழாவினையொட்டி சனிக்கிழமை காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் மாரியம்மன் ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200 புதிய ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமியாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற உள்ளது.
Special Deepavalis were held on Saturday at the Tumbavanam Mariamman temple, decorated with new rupee notes, on the occasion of the Navaratri festival.
இதையும் படிக்க: அமைதி, மகிழ்ச்சியால் உலகம் நிரம்பட்டும்! மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் செய்தி
What's Your Reaction?






