லடாக்கில் 3வது நாளாகத் தொடரும் ஊரடங்கு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லடாக்கின் லே நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனர். வன்முறையைத் தொடா்ந்து லே மாவட்டத்தில் புதன்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
லே நகரில் ஏற்பட்ட பரவலான மோதல்களைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்ய உள்துறை அமைச்சகக் குழு தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நிலைமை சீராக உள்ளதாகவும், ஏந்தொரு அசம்பாவிதமும் இதுவரை பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் வகையில் பிற்பகலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
A home ministry team held a series of meetings here to review the overall security situation as curfew remained in force for the third consecutive day in Leh town on Friday, officials said.
இதையும் படிக்க: சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
What's Your Reaction?






