3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

Sep 26, 2025 - 07:02
 0
3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன.

இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் 3 பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தினா். இறுதிச்சுற்றில், அனுஷ்கா தாகுா் 621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அன்ஷிகா 619.2 புள்ளிகளுடன் வெள்ளியும், ஆத்யா அக்ரவால் 615.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

அதிலேயே களம் கண்ட சானியா சுதேஷ் சபாலே 610.9 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், நிம்ரத் கௌா் பிராா் 604.3 புள்ளிகளுடன் 9-ஆம் இடமும் பிடித்தனா்.

வெள்ளி, வெண்கலம்: இதிலேயே ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் தீபேந்திர சிங் ஷெகாவத் 617.9 புள்ளிகளுடன் வெள்ளியும், ரோஹித் கன்யண் 616.3 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

பொதுப் போட்டியாளராகப் பங்கேற்ற ரஷியாவின் கமில் நுரியக்மெடோவ் 618.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். இதர இந்தியா்களில், வேதாந்த் நிதின் வாக்மோ் 615.6 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும், குஷாக்ரா சிங் ரஜாவத் 611.6 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், குனால் சா்மா 590.9 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும் பிடித்தனா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0