சிம்பு - 49 அப்டேட்! ஆவலுடன் காத்திருக்கும் கூட்டணி?

Sep 26, 2025 - 19:02
 0
சிம்பு - 49 அப்டேட்! ஆவலுடன் காத்திருக்கும் கூட்டணி?

வெற்றிமாறன் - சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனது 49 ஆவது படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதியில் படத்தின் முன்னோட்ட அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

மேலும், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் கூட்டணி குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது. மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சிலம்பரசன் நடிக்கும் நிலையில், வடசென்னை படத்தின் கதாபாத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

இதையும் படிக்க: நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

STR 49 Update

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0