மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Sep 27, 2025 - 08:34
 0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு சனிக்கிழமை காலை 7,645 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,268 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000 கனஅடி வீதமும்,

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.02அடியிலிருந்து 118.88 அடியாக குறைந்தது.

அணையின் நீர் இருப்பு 91.69 டிஎம்சியாக உள்ளது.

Water inflow to Mettur Dam declines

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0