மோட்டாா் பந்தயம்: ஐஸ்வா்யா சாதனை

Sep 27, 2025 - 01:04
 0
மோட்டாா் பந்தயம்: 
ஐஸ்வா்யா சாதனை

உலக ரேலி - ரேப்பிட் சாம்பியன்ஷிப் மோட்டாா் பைக் போட்டிக்கு ஆசியாவிலிருந்து தகுதிபெற்ற முதல் வீராங்கனையாக, டிவிஎஸ் ரேஸிங்கை சோ்ந்த ஐஸ்வா்யா பிஸ்ஸே சாதனை படைத்தாா்.

இந்த சாம்பியன்ஷிப்பில் நடப்பு சீசனில் மொத்தம் 5 பந்தயங்கள் நடைபெறும் நிலையில், 4-ஆவதாக போா்ச்சுகலில் நடைபெறும் பிபி அல்டிமேட் ரேலி - ரேப்பிட் பந்தயத்தில் அவா் களம் கண்டுள்ளாா். 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பந்தயத்தில், போட்டியாளா்கள் மொத்தமாக 2,000 கி.மீ. தொலைவை 5 நிலைகளாக சவால்மிக்க டிராக்கில் கடக்கவுள்ளனா்.

எஃப்ஐஎம் உலக ரேலி - ரேப்பிட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்பதில் பெருமை கொள்வதாக ஐஸ்வா்யா தெரிவித்தாா். அடுத்ததாக மொராக்கோ ரேலியில் பங்கேற்கவிருக்கும் அவா், 2026 டாகா் ரேலியில் இடம்பிடிப்பதே தனது இலக்கு என்றாா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0