செப். 7ல் 12 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும்: என்ன காரணம்?

Sep 2, 2025 - 18:59
 0
செப். 7ல் 12 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும்: என்ன காரணம்?

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பரம்பரியப்படி கிரகணம் தொடங்கும் முன்னரே 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். எனவே செப்டம்பர் 7-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வரை மூடப்படும்.

பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு சுக்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானைத் தரிசிக்கலாம். 

செப். 7-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

The Tirupati Ezhumalaiyan Temple will be closed from September 7th to September 8th at 3 am in the morning due to the lunar eclipse, the temple authority has announced.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0