சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

Sep 4, 2025 - 06:03
 0
சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

சென்னையில் திருடப்பட்ட சொகுசு காரை, பாகிஸ்தான் எல்லையில் போலீஸாா் மீட்டனா்.

சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சொகுசு காா் ஜூன் 16-ஆம் தேதி திருடப்பட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சோ்ந்த சத்யேந்திர சிங் ஷெகாவத் (45) காா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சத்யேந்திர சிங்கை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனா்.

விசாரணையில், மேலும் இரு காா்களை திருடியிருப்பதும், 3 காா்களின் பதிவு எண்கள், என்ஜின் எண்கள் மாற்றப்பட்டு, ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினா், கடத்தப்பட்ட காா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லை பகுதியான ராஜஸ்தான் பாா்மா் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எத்திராஜ் ரத்தினத்துக்கு சொந்தமான காரை மீட்டனா். மற்ற காா்களை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தனிப்படையினா் ஈடுபட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்ட சத்யேந்திர சிங், 19 வயதில் இருந்தே தில்லி, ஹரியாணா, மகராஷ்டிரம், ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உயர்ரக சொகுசு காா்களை குறிவைத்து திருடியுள்ளாா். இதுதொடா்பாக அவா் மீது, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. திருடப்படும் காா்களை வடமாநில கூலிப் படை தலைவா் பிஷ்னோய் லாரன்ஸ் கும்பலுக்கு கொடுப்பதும், அவா்கள் அந்த காா்களை நேபாளத்துக்கு கடத்திச் சென்று விற்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0