பாமகவில் இருதரப்பு இல்லை: ராமதாஸ்

தான் மட்டுமே தேர்தல் கூட்டணி குறித்த முடிவு எடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும்நிலையில், அக்கட்சி எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினராகவும் பிரிந்துள்ளனர்.
இந்த நிலையில், பாமகவில் இருதரப்பு என்றெல்லாம் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில்,
``பாமகவில் இருதரப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை. அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டமே. இந்த இருதரப்புப் பிரச்னை தேர்தல்வரையில் செல்லாது. அதற்குள்ளாக சரிசெய்யப்படும்.
அவர்கள் நடத்துவது தெருக்கூத்து. அதில் பஃபூன் உள்பட ஒவ்வொரு வேடமும் வரும். காத்திருந்து பாருங்கள்.
கூட்டணி தொடர்பாக நான்தான் முடிவெடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
What's Your Reaction?






