லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

Sep 26, 2025 - 16:34
 0
லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் தலைமையில் அங்குள்ள மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, லே நகரில் வன்முறை வெடித்ததால் காவல் படைகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், மோதல்களில் சுமார் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைக்கு, சோனம் வாங்சுக்கின் தூண்டுதல்தான் காரணம் என நேரடியாகக் குற்றம்சாட்டிய மத்திய உள் துறை அமைச்சகம், நேற்று (செப். 25) அவரது ‘லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)’ என்ற கல்வி அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில், ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று (செப். 26) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, லே வன்முறைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாக சோனம் வாங்சுக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

Academic and climate activist Sonam Wangchuk has been arrested after a protest demanding statehood for Ladakh turned violent.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0