ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

Sep 3, 2025 - 18:03
 0
ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் தேஜஸ்வி யாதவ் நடனமாடினார்.

பிகாரில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் வாக்குரிமைப் பேரணி நடைபெற்றது. பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலும், வாக்குத் திருட்டு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் பேரணி, நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், பிகார் இளைஞர்களுடன் நள்ளிரவில் சேர்ந்து சாலையில் தேஜஸ்வி யாதவ் நடனமாடியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

வெய்யில், மழை, பனிக்கு மத்தியில் 16 நாள்கள் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அன்று இரவு சிங்கப்பூரில் இருந்து எனது மருமகன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அவர் இரவு வெளியே செல்ல வேண்டும் என ஆசைப்பட்டதால், வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

அப்போது சாலையில் இளம் கலைஞர்களை சந்தித்தோம். அவர்கள் பாடல்கள் பாடியும் நடனமாடியும் உற்சாகமாக காணப்பட்டனர். அவர்கள் வற்புறுத்தியதால், அவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன்.

இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், கனவுகள், நம்பிக்கை ஆகியவற்றுடன் சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்ட புதிய பிகாரை கட்டியெழுப்புவதற்காகவும் அதிகாரத்தைக் கொண்டுவருவதற்காகவும் உறுதியேற்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

Tejashwi Yadav Over Dancing Video

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0