சர்தார் ஜி - 3! பாக். நடிகையுடனான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தில்ஜித்!

Sep 25, 2025 - 18:30
 0
சர்தார் ஜி - 3! பாக். நடிகையுடனான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தில்ஜித்!

பாகிஸ்தான் நடிகையுடனான படத்தில் நடித்தது குறித்த சர்ச்சை விவகாரத்தில் தில்ஜித் தோசஞ்ச் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற ஒரு கான்செர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்ஜித், ``நான் உங்களிடம் சிலவற்றைப் பற்றி பேச விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதல் நடந்ததிலிருந்து, பயங்கரவாதிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றுதான் இப்போதுவரையில் வேண்டி வருகிறோம்.

அந்தத் தாக்குதலுக்கு முன்பாகவே சர்தார் ஜி 3 எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அந்தத் தாக்குதலுக்குப் பிறகும் அந்நாட்டுடன் விளையாடி வருகின்றனர். இதுதான் வித்தியாசம்.

என்னிடம் நிறைய பதில்கள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு நான் அமைதியாக இருக்கிறேன். யார் என்ன சொன்னாலும், அதனை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். ஆகையால்தான், நான் எதுவும் பேசவில்லை. சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது; ஆனால், நான் சொல்ல விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதுடன், அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளும் விதிக்கப்பட்டன.

இதனிடையே, பாகிஸ்தான் நாட்டு நடிகை ஹனியா ஆமீருடன், சர்தார் ஜி 3 படத்தில் இந்திய பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசஞ்ச் நடித்தது சர்ச்சையானது. பாகிஸ்தான் மீது இந்தியா மோதலில் உள்ள நிலையில், அந்நாட்டு நடிகையுடன் இந்தியர் நடித்திருப்பது அவமானம் என்றெல்லாம் தில்ஜித்தை விமர்சித்தனர்.

அதுமட்டுமின்றி, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் சர்தார் ஜி 3-ஐ திரையிட தயாரிப்பாளர் திட்டமிருந்த நிலையில், அவர்களை தடுப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்குமாறு திரைத்துறை மேற்கத்திய இந்திய திரைப்பட ஊழியர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. மேலும், அவர்களின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினர். இருப்பினும், அவர்களின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில்தான், 5 மாதங்களுக்குப் பிறகு சர்தார் ஜி 3 படத்தின் மீதான சர்ச்சை குறித்து தில்ஜித் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?

Diljit Dosanjh breaks silence on ‘Sardaar Ji 3’ controversy

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0