அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

Sep 25, 2025 - 20:30
 0
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (25-09-2025) காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று(செப். 25) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 10 மணி வரை) கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆயுதபூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை!

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 28 districts, including Chennai, for the next 3 hours.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0