மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

Sep 2, 2025 - 18:43
 0
மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், சமைக்கப்படாத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட 13 வயது சிறுவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவனுக்கு சற்று நேரத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடல் முழுக்க வியர்த்து 30 நிமிடத்தில் வாந்தி எடுத்துள்ளான். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே சிறுவன் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகளவில், வேகாத நூடுல்ஸ் சாப்பிட்டதால், மிக மோசமான குடல் பிரச்னை அல்லது ஜீரண பிரச்னை ஏற்பட்டு சிறுவன் பலியானதாகக் கூறப்படுகிறது.

சில காலத்துக்கு முன்பு, சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிடும் போட்டிகள் பல நாடுகளில் புகழ்பெற்றிருந்தது. இந்த நிலையில், நூடுல்ஸ் விஷமல்ல என்று நிறுவனங்கள் விளக்கம் அளித்திருக்கின்றன. ஆனால், உடனடியாக மரணம் நிகழும் என்று எங்கும் தகவல் இல்லை. தொடர்ந்து சமைக்கப்படாத நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0