தெலங்கானா எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் கவிதா!

Sep 3, 2025 - 15:03
 0
தெலங்கானா எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் கவிதா!

தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை கே. கவிதா புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளதாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இதனையடுத்து, காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்து தனது தந்தை கே.சந்திரசேகா் ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக நெருங்கிய உறவினா்களான டி.ஹரீஷ் ராவ் மற்றும் ஜே.சந்தோஷ் குமாா் ஆகியோா் மீது கவிதா குற்றஞ்சாட்டினாா். இவா்கள் இருவரின் பின்னணியில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய சந்திரசேகா் ராவ் முடிவெடுத்ததாக பொதுச் செயலா்களான டி.ரவீந்தா் ராவ், சோமா பரத்குமாா் ஆகியோா் அறிவித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா பேசியதாவது:

கே. சந்திரசேகர் ராவும் கே.டி. ராமா ராவும் என் குடும்பத்தினர். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, பதவிகளை இழந்தாலோ இந்த பிணைப்பு முறிந்துவிடக் கூடாது.

நான் ஒருபோதும் தெலுங்கானா மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. ஆனால், சிலர் தங்களின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற என் தந்தைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான நோக்கங்களைப் பார்க்குமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொள்கிரேன். பிஆர்எஸ் குடும்பத்தை சுயநலத்துக்காக உடைத்துவிட்டார்கள்.

நான் பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து விலகுகிறேன். எனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Kavitha resigns from Telangana MLC post

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0