இடுகாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

Sep 3, 2025 - 16:33
 0
இடுகாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

சேலத்தில் இடுகாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் நடிகர் பெஞ்சமின்.

இதற்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இதனை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, இது போன்ற செயலில் ஈடுபடும் நடிகர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பெஞ்சமின் கலந்துகொண்டு இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சமூகத்தில் உள்ள தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவதாகவும் இதனால் தனக்கு மனநிறைவு ஏற்படுவதாகும் அவர் தெரிவித்தார்

இது குறித்து இடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் கூறும் போது, இந்த விமானப் பயணம் என்பது தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத புதிய அனுபவம் என்றும் இதுவரையில் இடுகாடு மட்டுமே வாழ்க்கை என்று நிலையில் இருந்த தங்களுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை என உணர்த்தும் வகையில் இந்தப் பயணம் அனுபவம் ஏற்பட்டுள்ளதாக நெகிழ்ச்சி உடன் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0