விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

Sep 3, 2025 - 15:03
 0
விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய மகளுடன், சீனத் தலைவர் பெய்ஜிங் சென்றுள்ளார். விமானத்தில் அல்ல, அவர் எப்போதும் செல்லும் அந்த பாரம்பரிய பச்சை நிற ரயிலில்தான்.

கிம் ஜாங் உன், தன்னுடைய 14 ஆண்டு கால ஆட்சியில், ஒரு சர்வதேச அளவில் நடைபெறும் மிகப் பெரிய நிகழ்வில் பங்கேற்க வெளிநாடு சென்றிருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

கிம் ஜாங் உன் மட்டுமல்லாமல், அவரது பல தலைமுறையினரை, இந்த ரயில்தான் நாட்டின் பல இடங்களுக்கும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. ஒரு சில வெளிநாட்டுப் பயணங்களும் நடந்திருக்கிறது.

பல்வேறு உலக நாடுகளில் இயக்கப்படும் விமானங்களைக் காட்டிலும் இந்த ரயில் பயணம்தான் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது, கிம் ஜாங் உன் எந்த வெளிநாட்டுக்குப் பயணித்தாலும் உடனடியாக இந்த ரயில் பற்றிய செய்தி முக்கியத்துவம் பெற்றுவிடும்.

இந்த ரயில் பெட்டிகளில் படுக்கை வசதி, உணவகம், வட கொரிய அதிபரின் அலுவலகம், தொலைத் தொடர்பு வசதிகளுடம் இடம்பெற்றிருக்கும்.

2023ஆம் ஆண்டு கிம், ரஷியா சென்றிருந்தபோது, இந்த ரயிலின் சக்கரங்கள், ரஷிய தண்டவாள அமைப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும், ஆனால், இந்த முறை சீனாவுக்கு இந்த பிரச்னை எழவில்லை என்றும் கூறப்படுகிறது. சீன எல்லைக்குள் ஒரு ரயில் வந்துவிட்டால், அதனை இழுத்துச் செல்லும் அனைத்து விவரங்களையும் கொண்டதாக சீன என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கிம் ஜாங் உன் தாத்தாவும், வட கொரியாவை நிறுவியவருமான கிம் இரண்டாம் சங், 1994ஆம் ஆண்டு உயிரிழக்கும்வரை, பல உலக நாடுகளுக்கும் இந்த ரயில் மூலமாகவே பயணித்துள்ளார்.

இவரது தந்தை இரண்டாம் கிம் ஜாங், ரஷியாவுக்கு 3 முறை இந்த ரயிலில் சென்றுள்ளாராம். கடந்த 2011ஆம் ஆண்டு அவரது ரயில் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது நேரிட்ட மாரடைப்பால்தான் அவர் மரணமடைந்துள்ளார். அந்த ரயில் தற்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0