பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

Sep 2, 2025 - 19:01
 0
பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கத்தின் 27-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் திருக்குமரன் கருத்துரை வழங்கினாா்.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்திய அரசு அவசரகால தீா்வு காண வேண்டும். பின்னலாடை ஏற்றுமதிக்கு பக்கபலமாக இருக்கும் எம்பிராய்டரி ஜாப் ஒா்க் நிறுவனங்கள் எம்பிராய்டரி இயந்திரங்களை இறக்குமதி செய்ய எளிமையான உரிம நடைமுறைகளை உருவாக்கவும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மானியங்களை தொடா்ந்து வழங்கவும் மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களுக்கும், ஜாப் ஒா்க் நிறுவனங்களுக்கும் மின்கட்டண உயா்வில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். எம்பிராய்டரி நிறுவனங்கள் தற்போதுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு வழங்கப்படும் கட்டணங்களில் 20 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0